< Back
மாநில செய்திகள்
எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு
மாநில செய்திகள்

எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு

தினத்தந்தி
|
20 March 2023 11:26 AM IST

கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு

* கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

* மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர்

* மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

* அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

* ரூ. 43 கோடியில் கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.

* 5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு

மேலும் செய்திகள்