அரியலூர்
கண் சிகிச்சை முகாம்; 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
|ஆண்டிமடம் இம்ப்ரஸ் அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் இம்ப்ரஸ் அரிமா சங்கத்தின் சார்பில் கண் சிகிச்சை முகாம் விளந்தை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஆண்டிமடம் இம்ப்ரஸ் அரிமா சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைச்சரவை இணைச் செயலாளர் தர்மதுரை, ஜெய் மாருதி பார்மசி உரிமையாளரும், மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவரும், மண்டல ஒருங்கிணைப்பாளருமான கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர். பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனையில் ஈடுபட்டனர். பரிசோதனையில் 400- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 83 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 110 பேருக்கு கண் கண்ணாடி பொறுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக சாசனத் தலைவர் சாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். இதில் மண்டல தலைவர் ராஜேந்திரன், வட்டாரத் தலைவர் ஜோதி, சாசன பொருளாளர் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர். முடிவில் சங்க செயலாளர் அருள்தாஸ் நன்றி கூறினார்.