< Back
மாநில செய்திகள்
டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
21 Jan 2023 12:15 AM IST

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திண்டுக்கல் நகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு வாரவிழா மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமை தாங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் திலிப் குமார், போலீசார் மற்றும் ஆட்டோ, வேன், லாரி டிரைவர்கள் 110 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது விபத்துகள் நடைபெறாமல் தடுக்க டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் டிரைவர்கள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்