< Back
மாநில செய்திகள்
கண் பரிசோதனை முகாம்
கரூர்
மாநில செய்திகள்

கண் பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
16 Oct 2023 11:05 PM IST

கண் பரிசோதனை முகாம் நடந்தது.

புகழூர் நகராட்சி காந்தி நகர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் நவீன், நந்தினி ராஜேஷ், ரம்யா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர் சதீஷ்குமார் தலைமையிலான செவிலியர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கினர். கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சையும், தரமான கண் கண்ணாடியும் குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்