< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்   இலவச கண் பரிசோதனை முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
4 July 2022 7:21 PM IST

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதையொட்டி திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா கண் மருத்துவமனை மருத்துவக்குழுவுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார். முகாமில் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் பெற வந்தவர்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க வந்தவர்கள், வாகனம் பதிவு செய்ய வந்தவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கண்பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 15 பேருக்கு கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு மூக்கு கண்ணாடி அணிய பரிந்துரை செய்யப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் விவேகானந்தா கண் மருத்துவமனை டாக்டர் விஷ்ணுப்பிரியா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்