< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
" புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் " - அமைச்சர் தங்கம் தென்னரசு
|6 Dec 2023 6:04 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். .
மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் வரும் 18ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் .