< Back
மாநில செய்திகள்
கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு

தினத்தந்தி
|
19 Oct 2023 2:15 AM IST

கோவையில் கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவைகாந்திபார்க் பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்.இவருடைய மகன் யுகல் (வயது 28). கேபிள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் ரேஸ்கோர்சில் உள்ள சினிமா தியேட்டருக்கு நண்பர்களுடன்படம் பார்க்கச் சென்றார். பின்னர் தியேட்டரில் தனியாக நின்று கொண்டு இருந்தார்.


அப்போது அங்கு வந்த 3 பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ90 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து யுகல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்