கரூர்
நிதி நிறுவன அதிபரை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறிப்பு: திருநங்கைகள் கைது
|கரூர் அருகே நிதி நிறுவன அதிபரை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
நிதி நிறுவன அதிபரிடம் பணம் பறிப்பு
கரூர் அருகே உள்ள தோரணக்கல் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). நிதிநிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல், பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கரூர்-சேலம் பைபாஸ் சாலை பகுதியில் அவர் வந்தபோது, திருநங்கை ஒருவர் ராஜேந்திரனிடம் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார்.
பின்னர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே அந்த திருநங்கையை இறக்கி விட்டு ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு நின்றிருந்த மற்றொரு திருநங்கையும், லிப்ட் கேட்டு வந்த திருநங்கையும் சேர்ந்து, ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
2 திருநங்கைகள் கைது
இதுகுறித்து ராஜேந்திரன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ராஜேந்திரனிடம் பணத்தை பறித்து சென்றது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த ராகவி (28), சில்பா (30) ஆகிய 2 திருநங்கைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.