< Back
மாநில செய்திகள்
எலெக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

எலெக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2023 1:15 AM IST

சின்னவேடம்பட்டியில் எலெக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் சிக்கினார்.

கணபதியை அடுத்த சின்னவேடம்பட்டியில் நேற்று முன்தினம் எலெக்ட்ரீசியன் சுரேஷ்குமார்(வயது 25) என்பவர் நடந்து சென்றார். அவரை எதிரே வந்த மர்ம ஆசாமி வழிமறித்து, மது வாங்க பணம் கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுத்ததால், அந்த ஆசாமி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துவிட்டு அந்த ஆசாமி தப்பி சென்றார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பணம் பறித்தது சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் விற்பனையாளராக பணிபுரியும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த யுவராஜ்(22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்