< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
|12 Aug 2022 2:54 PM IST
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வள்ளல் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 31), இவர் வள்ளல் சீதக்காதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2,700- ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து 3 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ராஜா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.