< Back
மாநில செய்திகள்
புவனகிரியில்    பெண்ணிடம் ரூ.7 ஆயிரம் பறிப்பு    மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
கடலூர்
மாநில செய்திகள்

புவனகிரியில் பெண்ணிடம் ரூ.7 ஆயிரம் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

புவனகிரியில் பெண்ணிடம் ரூ.7 ஆயிரத்தை மா்ம நபா் பறித்து சென்றுவிட்டாா்.


புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரோலன் கிறிஸ்டி(வயது 45). இவர் புவனகிரியில் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக ரூ.7 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு புவனகிரி கடை வீதியில் இருந்து வெள்ளாறு பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென ரோலன் கிறிஸ்சி ரூ.7 ஆயிரம் வைத்திருந்த பையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்