< Back
மாநில செய்திகள்
பணம் பறிப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பணம் பறிப்பு

தினத்தந்தி
|
31 Aug 2022 2:54 AM IST

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரின் மகன் சிவா (வயது 22). இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி வசூல் செய்த ரூ.20 ஆயிரத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். நெல்லை - தூத்துக்குடி சாலையில் கே.டி.சி. நகரை அடுத்துள்ள தனியார் மண்டபம் அருகே சென்ற போது மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிவாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென மர்மநபர்களில் ஒருவர் மதுபாட்டிலால் சிவாவின் தலையில் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்