< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
திருச்சி
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 1:12 AM IST

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொன்மலைப்பட்டி:

திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.600-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது,திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பாலமுரளி (23), பொன்னேரிபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்