< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை நீட்டிப்பு
|3 April 2024 7:32 PM IST
வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை,
சென்னை - நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முதல் வரும் 25ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.15 மணிக்கு ரெயில் (06067) புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு ரெயில் (வண்டி எண் 06068) புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னைஎழும்பூர் வந்தடையும் - என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.