< Back
மாநில செய்திகள்
திருச்சி-ஆமதாபாத் வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி-ஆமதாபாத் வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு

தினத்தந்தி
|
28 Jun 2023 12:56 AM IST

திருச்சி-ஆமதாபாத் வாராந்திர ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி-ஆமதாபாத் இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 09419 ஆமதாபாத்-திருச்சி இடையேயான வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் ஜூலை மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகள் மற்றும் ஆகஸ்டு மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஆமதாபாத்தில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாளான சனிக்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வந்து சேரும். எதிர்மார்க்கத்தில் இந்த ரெயில் வண்டி எண் 09420 திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் ஜூலை மாதம் 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் மற்றும் ஆகஸ்டு மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகள் மற்றும் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி ஆகிய நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாளான திங்கட்கிழமை இரவு 9.15 மணி அளவில் ஆமதாபாத் சென்று அடையும். இந்த ரெயில் நேரத்திலோ, நிறுத்தங்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்