< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - துணைவேந்தர் தகவல்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - துணைவேந்தர் தகவல்

தினத்தந்தி
|
24 Sept 2022 8:07 AM IST

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

சென்னை:

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி, கிளி மூக்கு வால் போன்ற நாட்டு கோழிகள் இடம் பெற்றன.

இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் ' 4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன.

இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 3-ந்தேதி என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.' என்று தெரிவித்தார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நாளை மறுதினத்துடன்(26-ந்தேதி) முடிவடைந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்