< Back
மாநில செய்திகள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு

தினத்தந்தி
|
6 Sept 2022 11:46 PM IST

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-23-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 30.9.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 8 மற்றும் 10ம்-வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 14 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும் பெண்களுக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசினர் தொழிற்பயற்சி நிலையங்களுக்கு அலுவலக நேரத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் மாதந்திர கல்வி உதவி தொகையாக ரூ.750-ம், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், வரைபட கருவிகள் வழங்கப்படும். இதுதவிர தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களை பரமக்குடி-04564 231303, ராமநாதபுரம்- 04567 231214, முதுகுளத்தூர்- 04576 222114 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்