புதுக்கோட்டை
அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு
|அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
புதுக்கோட்டை, ஜூன்.12-023-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 24.05.2023 முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக பெறப்பட்டு வந்தது. தற்போது இதற்கான கால அளவு வருகிற 20-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இடப்பெயர்வு சான்றிதழ், ஆதார் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை-04322-221584, அரசு தொழிற்பயிற்சி நிலையம், விராலிமலை- 8667426792, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை- 04322-299382 ஆகும். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.