நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
|நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பல்வேறு வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.07695) இன்று (புதன்கிழமை), 10, 17 ஆகிய தேதிகள் வரையும் (புதன்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) வரும் 5, 12, 19 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து மதுரை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07191) வரும் 8, 15, 22, 29 ஆகஸ்டு 5, 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரையும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக மதுரையில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07192) இன்று (புதன்கிழமை), 10, 17, 24, 31 ஆகஸ்டு 7, 14, 21, 28 செப்டம்பர் 4, 11, 18, 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகள் வரையும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மராட்டியம் மாநிலத்தில் இருந்து ஈரோடு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07189) வரும் 5, 12, 19, 26 ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து மராட்டியம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) வரும் 7, 14, 21, 28 ஆகஸ்டு் 4, 11, 18, 25 செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07435) வரும் 5, 12, 19, 26 ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07436) வரும் 7, 14, 21, 28 ஆகஸ்டு 4, 11, 18, 25 செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* குறிப்பாக மதுரையில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.55 புறப்படும். தற்போது அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் திண்டுக்கல் 11.40 மணிக்கும், திருச்சி 1.25 மணிக்கும், தஞ்சாவூர் 2.43 மணிக்கும், பாபநாசம் 3.05 மணிக்கும், கும்பகோணம் 3.23 மணிக்கும் சென்றடையும். அதன்பின் செல்லும் ரெயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்திலேயே செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.