< Back
மாநில செய்திகள்
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மாநில செய்திகள்

சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
6 Jun 2024 7:17 AM IST

சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

பிரபல யூடியூபர் சவுக்குசங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 4-ந் தேதி தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கடந்த 20-ந்தேதி இந்த வழக்கில் அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த மதுரை கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதன்பேரில் அவரிடம் தேனி மாவட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனால் இந்த வழக்கில் அவரை நேற்று நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஏற்கனவே மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர், கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்