< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
மாநில செய்திகள்

சென்னை சென்டிரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

தினத்தந்தி
|
27 Aug 2024 11:22 PM GMT

சென்னை சென்டிரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043), இன்று (புதன்கிழமை), மற்றும் வரும் மாதம் (செப்டம்பர்) 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06044) நாளை (வியாழக்கிழமை) மற்றும் செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்