< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
|18 May 2024 4:07 PM IST
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இதனிடையே குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராக உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் குளிக்கும் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.