< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு
|6 Aug 2022 3:12 PM IST
மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.