< Back
மாநில செய்திகள்
10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
மாநில செய்திகள்

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
28 March 2023 11:59 PM IST

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தநிலையில் வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்