< Back
மாநில செய்திகள்
மாணவா்கள் சேர்க்கை 20-ந் தேதி வரை நீட்டிப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவா்கள் சேர்க்கை 20-ந் தேதி வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
10 Jun 2023 12:15 AM IST

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சேர்க்கை 20-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் ஏற்கனவே உள்ள எலக்ட்ரீசியன், பிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஆகிய தொழில் பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புதியதாக மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம், அட்வான்ஸ்ட் சி அன்ட் சி டெக்னீசியன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன், ஆகிய தொழில் பிரிவுகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் சேரலாம். மேலும் வெல்டர் தொழில் பிரிவில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் அல்லது நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும்போது மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் வரவேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.750, இலவச பாட புத்தகங்கள், விலையில்லாத மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணி, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ,1000 வழங்கப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தவுடன் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்