< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே    அண்ணன்-தம்பி நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே அண்ணன்-தம்பி நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
21 Nov 2022 6:45 PM GMT

கள்ளக்குறிச்சி அருகே ஆள்மாறாட்டம் செய்து அண்ணன்-தம்பிக்கு சொந்தமான சொத்துகளை அபகரித்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டாச்சிமங்கலம்,

சார் பதிவாளர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சார்-பதிவாளர் சங்கீதா, இவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தை சோ்ந்த சொக்கலிங்கம் மகன்கள் குருலிங்கத்துக்கு 2 ஏக்கர் 26 சென்ட் நிலமும், சுந்தர்ராஜனுக்கு சொந்தமாக 2 ஏக்கர் 45 சென்ட் நிலமும் உள்ளது. இந்த இடத்தை கலையநல்லூரை சேர்ந்த ரவி என்பவர் கடந்த 50 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்.

ஆள்மாறாட்டம் செய்து...

இந்த நிலையில் குருலிங்கம், சுந்தர்ராஜன் ஆகியோர் யார் என்றே தெரியாத சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவரும், குன்னியூர் கிராம உதவியாளருமான சிவா சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அரும்பராம்பட்டை சேர்ந்த தனது உறவினா் சுப்பிரமணியன் என்பவரை குருலிங்கம் எனவும், சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் மாாிமுத்து என்பவரை சுந்தர்ராஜன் என்றும் ஆள்மாறாட்டம் செய்து போலியாக ஆதார் அட்டை தயாரித்து மேற்கண்ட சொத்துகளை போலி ஆவணங்களை தயார் செய்தார்.

6 பேர் மீது வழக்கு

அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் வேப்பூரை சேர்ந்த பெரியசாமி மனைவி ராஜகுமாரி என்பவருக்கு நிலத்தை பவர் பத்திரம் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ராஜகுமாரியிடம் இருந்து சூ.பாலப்பட்டை சேர்ந்த கேசவன் மகன் மாரிமுத்து மற்றும் சங்கராபுரம் அருகே எல்.என்.பட்டியை சேர்ந்த கமாலுதீன் மகன் பீர்முகமதுவும் ஆகியேருக்கு மேற்கண்ட சொத்துகளை பிரித்து தனித்தனியாக கிரையம் பெற்றுள்ளனர். ஆகவே அண்ணன்-தம்பி 2 பேரின் சொத்துகளை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயார் செய்தும் அபகாித்து மோசடி செய்த அரும்பராம்பட்டை சேர்ந்த கூத்தன் மகன் சுப்பிரமணியன், மாரிமுத்து, சிவா, ராஜகுமாரி, கே.மாரிமுத்து, பீர்முகமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

3 பேர் கைது

அதன் போில் சிவா உள்ளிட்ட 6 போ் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து மாயவன் மகன் மாரிமுத்து, ராஜகுமாரி மற்றும் கேசவன் மகன் மாரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கிராம உதவியாளர் சிவா உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்