< Back
மாநில செய்திகள்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நிற்காது - தெற்கு ரெயில்வே
மாநில செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நிற்காது - தெற்கு ரெயில்வே

தினத்தந்தி
|
9 Aug 2024 8:53 PM IST

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னையின் மூன்றாம் ரெயில் முனையும் அமைக்கும் பணிகளுக்காக தாம்பரத்தில் கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் பகுதி நேரமாகவும், சில ரெயில்கள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களின் சேவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிற்காது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில்,

"தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்புப் பணிகள் காரணமாக, அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 15.08.2024 (வியாழன்), 16.08.2024 (வெள்ளிக்கிழமை), 17.08.2024 (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு தாம்பரத்தில் நிற்காது.

இந்த நாட்களில் சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் நிற்காது என்றாலும், பயணிகளின் வசதிக்காக மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும். இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு தாம்பரத்தில் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டில் கூடுதலாக நின்று செல்லும்."

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்