< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
|29 Sept 2023 12:45 AM IST
சென்னை, கோவையில் இருந்து நீடாமங்கலத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்தன.
சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 6.09 மணிக்குத்தான் நீடாமங்கலம் வந்தது. இதேபோல் காலை 6.30 மணிக்கு வரவேண்டிய கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 36 நிமிடங்கள் தாமதமாக காலை 7.06 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. ரெயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர்.