< Back
மாநில செய்திகள்
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
சென்னை
மாநில செய்திகள்

கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி

தினத்தந்தி
|
15 Sept 2023 9:39 AM IST

கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.

நெல்லை மாவட்டம் பெத்தநாடார்பட்டியை சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 51). இவருடைய மகள் பேபி (27). இவர், வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் கிண்டி வந்தார். பின்னர் கிண்டி ரெயில் நிலையத்தில் தணடவாளத்தை கடந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல முயன்றார்.

அப்போது, எழும்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பேபியின் மீது மோதியது. இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய பேபி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பேபியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்