தஞ்சாவூர்
தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
|தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
கோரிக்கை மனு
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் புறப்படும்(பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்று) பகல்நேர சேர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூதலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்ற செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
தூத்துக்குடி, திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
தஞ்சையில் இருந்து திருப்பதி, திருவனந்தபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.
தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரெயில் இயக்க வேண்டும்.திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொதுப்பெட்டிகள் இணைக்க வேண்டும்.காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தஞ்சை-அரியலூர், தஞ்சை-பட்டுக்கோட்டை, கும்பகோணம்-விருத்தாசலம், பட்டுக்கோட்டை-மன்னார்குடி ஆகிய ரெயில்பாதை திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கி திட்டங்களை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.