< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி
|24 Sept 2023 10:15 AM IST
வியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், பலியானவர் பெரம்பூர் திரு.வி.க.நகர் மருத்துவமனை சாலையைச் சேர்ந்த நாகராஜ் (வயது 30) என்பதும், கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்த இவர், நண்பரை பார்க்க வியாசர்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியானது தெரியவந்தது.