< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி

தினத்தந்தி
|
13 Jan 2023 12:50 AM IST

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

விற்பனை கண்காட்சி

தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு இந்த சந்தை நடத்தப்படுகிறது. இது மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கூடுதல் விற்பனை செய்யும் வாய்ப்பும், கூடுதல் வருவாயும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படுகிறது.

38 குழுக்கள் பங்கேற்பு

இந்த கண்காட்சியில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 38 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துகொண்டு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, ஐ.ஓ.பி. வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, கல்லூரி முதல்வர் சிந்தியாசெல்வி, உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்