< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை..!
|13 Jan 2024 2:48 PM IST
கலெக்டர் அலுவலகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் நெல்லையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் , நகரின் முக்கிய பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் இன்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.