< Back
மாநில செய்திகள்
விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்து: உடல் கருகி ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்து: உடல் கருகி ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
20 May 2024 4:50 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திப்பள்ளம் என்ற இடத்தில் வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் இன்று 2 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின.

இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் (27 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு உரிமம் பெற்றுதான் இந்த பட்டாசு குடோன் செயல்பட்டு வந்ததாகவும், மின் கசிவு காரணமாக இந்த பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெடி விபத்து தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்