< Back
மாநில செய்திகள்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
25 July 2023 1:38 PM IST

சிவகாசி அருகே உள்ள மண்டகுண்டாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்