< Back
மாநில செய்திகள்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
15 Dec 2023 8:34 AM IST

வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்