< Back
மாநில செய்திகள்
கடலூர் அருகே, பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  மேலும் ஒரு பெண் பலி  சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்வு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் அருகே, பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மேலும் ஒரு பெண் பலி சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்வு

தினத்தந்தி
|
24 Jun 2022 9:46 PM IST

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

வெடி விபத்து

கடலூர் அருகே எம்.புதூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36), இவரது மனைவி வனிதா (30). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர்.

அதில் நேற்று முன்தினம் மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த பெரியகாரைக்காடு சித்ரா, வான்பாக்கம் அம்பிகா, மூலக்குப்பம் சத்தியராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

மேலும் ஒருவர் பலி

நெல்லிக்குப்பம் அருகே குடிதாங்கிச்சாவடியை சேர்ந்த சேகர் மனைவி வசந்தா (45), வெடி வாங்க வந்த வெள்ளக்கரையை சேர்ந்த வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வசந்தாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பட்டாசு ஆலை வெடி விபத்து சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்