< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
|17 May 2023 2:08 PM IST
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விதிகளை மீறி பட்டாசு தயார் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்டாசு கடை விபத்தில் 2 பேர் கடையின் உள்ளே சிக்கிய நிலையில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த விபத்தில் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன.