கள்ளக்குறிச்சி
உலகளந்த பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தி விளக்க கூட்டம்
|திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தி விளக்க கூட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும், குற்ற சம்பவங்களை தடுக்க நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க கோரி பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் தானியேல் தலைமை தாங்கினார். வக்கீல் எம்.ஜி.ஆர்.ராஜ், ஒன்றிய செயலாளர் அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டேவிட்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓம்பிரகாஷ், வக்கீல் செல்வபதி, நிர்வாகிகள் அசார், சிவராமன் மற்றும் சுபாஷ், கார்த்தி, நடராஜன், வேணுகோபால், வீரமணி, கனகனந்தல் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தீனதயாளன் நன்றி கூறினார்.