< Back
மாநில செய்திகள்
காலாவதியான காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கலாம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

காலாவதியான காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கலாம்

தினத்தந்தி
|
9 July 2023 12:14 AM IST

அஞ்சல் துறையில் காலாவதியான காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கலாம்.

ராமநாதபுரம்,

இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் தவணை தொகையை செலுத்த தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க இயலும். தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குனரகமானது 1.6.2023 முதல் 31.8.2023 வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை விலக்கு அளிக்கும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்