கடலூர்
பெண்ணாடத்தில்விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
|பெண்ணாடத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் உசேன் மகன் ஷாஜகான் (வயது 26). இவர் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் விலைகொண்ட மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஷாஜகான் தூங்க சென்றார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதேபோன்று அதேபகுதியில் வசிக்கும் கனிமொழி என்பவரது ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஷாஜகான், கனிமொழி ஆகியோர் தனித்தனியாக திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பெண்ணாடம் பகுதியில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பெண்ணாடம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.