< Back
மாநில செய்திகள்
ரூ.13 கோடியில் நல்லதங்காள் அணை விரிவாக்க பணி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரூ.13 கோடியில் நல்லதங்காள் அணை விரிவாக்க பணி

தினத்தந்தி
|
30 Jun 2022 9:16 PM IST

பழனி அருகே ரூ.13 கோடியில் நல்லதங்காள் அணை விரிவாக்க பணியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

பழனி அருகே, கொத்தயம் கிராமத்தில் நல்லதங்காள் அணைக்கட்டு உள்ளது. இந்த அணையை விரிவுப்படுத்தி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் பேசினார். இதன் எதிரொலியாக கொத்தயம் நல்லதங்காள் அணையில் விரிவாக்க பணி மேற்கொள்ள, ரூ.13 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அணை விரிவாக்க பணி மேற்கொள்வதற்கான பூமிபூஜை கொத்தயத்தில் நடந்தது. இதில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அணை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்திய புவனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீர்வரத்து கண்காணிப்பு பொறியாளர் காஜா முகைதீன், உதவி பொறியாளர் உதயகுமார், அரசு ஒப்பந்ததாரர் வேலுச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, கொத்தயம் ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் குப்பாத்தாள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்