< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் மூலிகை செடிகள் கண்காட்சி
|2 Nov 2022 10:59 PM IST
ஆண்டிப்பட்டி அருகே பொன்னம்மாள்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மூலிகை செடிகள் கண்காட்சி நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி அருகே பொன்னம்மாள்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மூலிகை செடிகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகை மூலிகை செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கப்பன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, மூலிகை செடிகளை பார்வையிட்டனர். மேலும் இந்த கண்காட்சியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளும் பார்வையிட்டனர். அப்போது மாணவ-மாணவிகளுக்கு மூலிகைகளின் பெயர், அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.