< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
இந்திய நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலக கோப்பை மாதிரி கண்காட்சி
|17 Oct 2023 1:36 AM IST
இந்திய நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலக கோப்பை மாதிரி கண்காட்சி நடந்தது.
இந்திய நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலக கோப்பை மாதிரியை திருச்சி நாணவியல் கழக செயலாளார் பத்ரி நாராயணன் வடிவமைத்து இருந்தார். இந்த கிரிக்கெட் உலக கோப்பை மாதிரி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் மாரிமுத்து திருச்சி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். நாணயவியல் சேகரிப்பாளர்கள் விஜயகுமார், இளம்பழுதி, ராஜ்குமார், பத்மகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி நன்றி கூறினார்.