< Back
மாநில செய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை
கரூர்
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை

தினத்தந்தி
|
21 Sep 2023 7:04 PM GMT

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்து காண்பித்தனர்.

இதில் பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பது, தீயினால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சாலையோரம் மரங்கள் மற்றும் கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற பயிற்சிகளை தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையினர் வழங்கினர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் என்சிசி, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஒய்.ஆர்.சி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்