< Back
மாநில செய்திகள்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

தினத்தந்தி
|
23 Jan 2023 12:15 AM IST

பணிச்சுமை ஏற்படுவதால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீ்ட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கள்ளக்குறிச்சி

செயற்குழு கூட்டம்

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 37-வது மாநில செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ரங்கநாதன், அமைப்பு செயலாளர் அருளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அன்புமணி வரவேற்றார். இதில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை வரவு வைக்கப்படாததை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள மருத்துவர் சேம நலநிதி பணப்பலன் கிடைக்க வலியுறுத்தி அடுத்த மாதம்(பிப்ரவரி) டி.எம்.எஸ்.வளாகத்தில் போராட்டம் நடத்துவது, பணிச்சுமை மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல் படுத்துவதிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். காலப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாவட்ட சுகாதார குழுமம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வலைதள பிரிவு செயலாளர் ஷோஜி, மருத்துவ பணியாளர் சங்க செயலாளர் ராஜேஷ்ராம், மாநில இணை செயலாளர் ரமேஷ், துணைத்தலைவர்கள் ரமா, முத்துராஜ், மாவட்ட ஆலோசகர் பழமலை, பொருளாளர் அன்புக்குமார், மருத்துவசங்க ஆசிரியர் கார்த்திகேயன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்