< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் செயற்குழு கூட்டம்
|13 Aug 2023 5:31 PM IST
வந்தவாசியில் கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் செயற்குழு கூட்டம் நடந்தது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வந்தவாசி தேரடி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆ.உதயகுமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் என்.பத்ராசலம், துணைத்தலைவர்கள் ஆர்.ஜோதிமணி, ஜி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வு கால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இ்தில் நிர்வாகிகள் பி.புருஷோத்தமன், லட்சுமிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.