தர்மபுரி
கடத்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பங்கேற்பு
|மொரப்பூர்:
தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதம் வழங்கும் விழா கடத்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.அரசாங்கம் வரவேற்று பேசினார். மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி.செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இமயவர்மன், வணங்காமுடி, மதியழகன், சின்னசாமி, மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் கையொப்பமிட்ட நியமன கடிதங்களை நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ம.க. வளர்ச்சியில் தமிழகத்தில் முதன்மையாக திகழ்வது தர்மபுரி மாவட்டம் தான். புதிய பொறுப்பாளர்கள் நியமன கடிதங்களை பெற்று அந்த பொறுப்பிற்கு ஏற்றவாறு கட்சி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பா.ம.க.வுக்கு முழுமையான வாக்குகளை பெறவேண்்டும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் அன்புமணி ராமதாசை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய முனைப்போடு பாடுபட வேண்டும் என்று பேசினார். இதில் பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் மாது, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு, மாவட்ட அமைப்பு செயலாளர் கே.எஸ்.சரவணன், மாவட்ட அமைப்பு தலைவர் மதியழகன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் சி.முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடத்தூர் பேரூர் செயலாளர் பிரின்ஸ் நன்றி கூறினார்.