< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா மண்டல செயற்குழு கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பா.ஜனதா மண்டல செயற்குழு கூட்டம்

தினத்தந்தி
|
17 Feb 2023 2:55 AM IST

நெல்லையில் பா.ஜனதா மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது.

பா.ஜனதா கட்சி நெல்லை தச்சநல்லூர் நகர் தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் மலைஅரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் டி.வி.சுரேஷ், மாவட்ட செயலாளர் மேகநாதன் ஆகியோர் பேசினார்கள். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றுக்கு பொதுமக்கள் செல்லும் பாதையில் உள்ள மின்விளக்கு கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மண்டல பொருளாளர் ஓஷோ இசக்கி, பொதுச்செயலாளர் அண்ணாச்சி ஆரியா, பட்டியல் அணி வைரமுத்து, நெசவாளர் அணி முருகப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்