< Back
மாநில செய்திகள்
பெருந்துறை சிப்காட்டில் சாயக்கழிவுகளை வெளியேற்றும்  தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய  மீண்டும் சிறப்பு குழு   கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஈரோடு
மாநில செய்திகள்

பெருந்துறை சிப்காட்டில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மீண்டும் சிறப்பு குழு கலெக்டரிடம் கோரிக்கை மனு

தினத்தந்தி
|
22 Sep 2023 9:59 PM GMT

பெருந்துறை சிப்காட்டில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மீண்டும் சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனக்கூறி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சென்னிமலை

பெருந்துறை சிப்காட் பகுதியில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மீண்டும் சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனக்கூறி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பாதிப்பு

பெருந்துறை மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் பகுதியில் 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதில் சில சாய தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் முறைகேடாக வெளியேற்றியதால் சிப்காட்டை சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களில் நீர், நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று சிப்காட் பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த 3 சாய தொழிற்சாலைகள் மற்றும் ஒரு ரசாயன தொழிற்சாலைகளின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு வசதியை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

மனு

இந்த நிலையில், பெருந்துறை சிப்காட் கழிவுநீர் மற்றும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு கலெக்டர், சிப்காட் திட்ட அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு கலெக்டரின் உத்தரவுப்படி சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த நிபுணர் குழுவின் அறிக்கையின்படி பெருந்துறை சிப்காட்டில் முறைகேடாக செயல்பட்டு வந்த 4 தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மீண்டும் அந்த நிறுவனங்கள் சாயக்கழிவுகளை வெளியேற்றாமல் "ஜீரோ டிஸ்சார்ஜ்" முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மீண்டும் ஒரு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு குழு நிறுவனங்களை கண்காணிப்பதுடன், தொடர்ந்து விதிமுறைகளை மீறி அந்த நிறுவனங்கள் செயல்பட்டால் அதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்